தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்படுவதால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kunderipallam Dam
குண்டேரிப்பள்ளம் அணை

By

Published : May 7, 2021, 10:42 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வினோபாநகர் அடர்ந்த வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. கடந்த நான்கு நாட்களாக மலைக்கிராமங்களில் பெய்த மழையினால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி அணை வேகமாக நிரம்பி வந்ததது.

இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 39.39 அடியாக இருந்த நிலையில், இன்று(மே.7) அதிகாலை குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 9 கனஅடி வரை வந்தது. இதனால் அணை நிரம்பியது. அணைக்கு வந்த உபரிநீர் ஓடை வழியாக 9 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது

குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி மூலமாகவும் வருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வினோபாநகர், தேப்பூர், கொங்கர்பாளையம், மோதூர், வாணிப்புத்தூ,ர் பள்ளத்தூர், கள்ளியங்காடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்குமேயானல் உபரிநீர் அதிகளவு வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உபரிநீர் வெளியேற்றம் படிப்படியாக தற்போது ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. வெள்ளநீர் வெளியேற்றத்தின்போது விபரீதம் உணராமல் இளைஞர்கள் மீன் பிடித்தும், குளித்தும் விளையாடினர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை விரட்டினர்.

இதையும் படிங்க: சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் யார்? - அதிமுக ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details