தமிழ்நாடு

tamil nadu

தொடர் மழை காரணமாக ஒரே நாளில் நிரம்பிய குண்டேரிப்பள்ளம் அணை!

By

Published : Nov 5, 2021, 6:08 PM IST

கோபிசெட்டிபாளையம் அருகே பெய்த தொடர் மழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.

v
v

ஈரோடு:ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இதன் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக, ஒரே நாளில் அணை நிரம்பியது.

இதன் காரணமாக அணையிலிருந்து சுமார் 2ஆயிரம் கனஅடி நீர் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (நவம்பர் 4) குண்டேரிப் பள்ளம் அணை நீர் பிடிப்புப் பகுதிகளான குன்றி, விளங்கோம்பை, மல்லி துர்க்கம், கடம்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் 37 அடியாக இருந்த குண்டேரிப்பள்ளம் அணை தனது முழுக் கொள்ளளவான 42 அடியை எட்டியது.

10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், மோதூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் அணையில் சுமார் 20 அடிக்கும் மேல் சேரும் சகதியும் தேங்கி இருப்பதால், அணைக்கு வரும் மழை நீரை பாதி அளவே சேமித்து வைக்க முடிகிறது எனவும், இதனால் உடனே அணையைத் தூர்வார வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:முதல்முறையாக முல்லைப்பெரியாறு அணையில் நான்கு அமைச்சர்கள் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details