ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் இருந்து வெளியேறி தொட்டகாஜனூர், திகினாரை, இரியாபுரம் பகுதியில் புகுந்து, அங்கு சாகுபடி செய்த விவசாயப்பயிர்களை சேதப்படுத்தியும் மனிதர்களை தாக்கியும் தொந்தரவு செய்யும் கருப்பன் என்ற ஒற்றை ஆண்யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி, ராஜவர்தன் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கருப்பன் யானை வந்த பாதையை ஆராய்ந்து 3 கிமீ தூரம் வரை தேடியபோது யானையின் கால்தடம் பதிவான இடத்தை வனத்துறை ஆய்வு செய்தனர்.