தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கத் தடை! - கோபிசெட்டிபாளையம் கொடிவேரி தடுப்பணை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

kodivery dam

By

Published : Oct 23, 2019, 12:01 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவி மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிகக்வும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

12 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமையாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் அமைந்துள்ள கொடிவேரி அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய நான்கு தாலுகாக்களில் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுகப்பட்டுள்ளது.

கொடிவேரி தடுப்பணை

மேலும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, தீயணைப்புத்துறை பேரிடர் மீட்புக்குழுவினர் என அனைத்து தரப்பிலும் உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு பணியிலும், முன்னெச்சரிக்கை நடடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என அனைத்துத்துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

பவானிசாகர் அணையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

ABOUT THE AUTHOR

...view details