ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 9ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மழை பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கொடுவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் ஒன்பது நாட்களுக்குப் பிறகு இன்று பொதுப்பணித் துறை அனுமதியளித்து.
குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச்சேர்ந்தச் சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் கொடிவேரி அணைக்குச் சுற்றுலா சென்றனர். அணையில் தண்ணீர் கொட்டியபடி பாய்ந்து சென்று கொண்டிருந்ததைக் கண்ட அனைவரும் அணையில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர் சுதீஷ்(15), விக்னேஷ்(18) ஆகியோர் ஆழமான பகுதிக்குச் சென்றதாகத் தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார்.
கொடிவேரி அணை நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி இதுகுறித்து தகவலறிந்த வந்த சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரத்தேடலுக்குப் பிறகு மாணவர்களைச் சடலமாக மீட்கப்பட்டனர். மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து மீண்டும் கொடுவேரி அணை அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க: லாரி மீது புல்லட் மோதி தந்தை, மகன் உயிரிழப்பு!