தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்! - Kilbhavani Water Stopped

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட 2ஆம் சுற்றுக்கான தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்.! கீழ்பவானி வாய்க்கால் பாசன தண்ணீர் நிறுத்தம் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் நிறுத்தம் Kilbhavani Water Stopped Bhvani Sagar Dam Water Stopped
Kilbhavani Water Stopped

By

Published : Feb 21, 2020, 3:20 PM IST

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட 2ஆம் சுற்று தண்ணீர் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்ன் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள ஒற்றைப்படை மதகுகளுக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 31ஆம் தேதி வரை 6 சுற்றுக்கான தண்ணீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதல்சுற்று தண்ணீர் ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2ஆம் சுற்று தண்ணீர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 2ஆம் சுற்று தண்ணீர் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது. 3ஆம் சுற்று தண்ணீர் இன்னும் 12 நாள்கள் கழித்து திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

கீழ் பவானி அணை

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.80 அடியாகவும் நீர் இருப்பு 27 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 893 கனஅடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைக்காக பவானி ஆற்றில் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதையும் படிங்க:'வெறி நாய்க்கடி நோய் இல்லாத மாநகரம்' - சென்னை மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகள்

ABOUT THE AUTHOR

...view details