தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் களைக்கட்டும் பலாப்பழம் விற்பனை - kerala jack fruit sale

ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கேரள பலாப்பழம் விற்பனை களைகட்டியுள்ளது. எடைக்கேற்ப பழம் ஒன்று ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சத்தியில் பலா விற்பனை

By

Published : May 11, 2019, 8:36 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரள மாநிலத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பழுக்கும் தருவாயில் உள்ள பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் பலா பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

மரங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பழங்கள் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு, நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டாரங்களில் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழத்தின் எடைக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பலாபழங்களை ஆர்வத்துடன் விலை பேசி வாங்கிச் செல்கின்றனர்.

சத்தியமங்கலத்தில் களைக்கட்டும் பலாப்பழம் விற்பனை

ABOUT THE AUTHOR

...view details