தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்கள் ஆபத்து, அவசர காலங்களில் தங்களை தற்காத்துகொள்ளவும், தங்கள் இருக்குமிடத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் காவலன் என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா இச்செயலி குறித்த விளக்கம் தமிழ்நாடு முழுவதும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சத்தியமங்கலம் காவல் கோட்டத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவியர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில் காவலன் செயலி பயன்பாடு குறித்து மாணவியரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அண்மையில் தெலுங்கான மாநிலத்தில் பெண் கால்நடைமருத்துவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மூலம் பெண்கள் காவலன் செயலியை படுத்துவதுமட்டுமின்றி பிற பெண்களுக்கும் தங்கள் பெண் குழந்தைகளுக்கும் காவலன் செயலின் பயன்பாட்டின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.
மேலும் எல்லா நேரங்களிலும் காவலன் செயலியை பயன்படுத்தி பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார்.