சத்தியமங்கலத்தில் போக்கு காட்டும் கருப்பன் யானை.. வனத்துறையினர் திணறல்! ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி, ஜீரஹள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை கருப்பன் யானை தினந்தோறும் இரவு நேரத்தில் வனத்தையொட்டியுள்ள ரங்கசாமி கோயில், மரியாபுரம், மல்லன்குழி, மெட்டல்வாடி, அருள்வாடி, சூசைபுரம், தொட்டகாசனூர் ஆகிய கிராமங்களில் புகுந்து அங்குச் சாகுபடி செய்த வாழை,மக்காச்சோளம், தென்னை பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது.
இதையடுத்து பயிர்களைப் பாதுகாக்க இரவு நேரக் காவலுக்குச் சென்ற விவசாயிகள் திகினாரை மாதேவப்பா, தொட்டகாஜனூர் மல்லநாயக்கர் ஆகியோரை யானை தாக்கி கொன்றது. விவசாயப்பயிர்களை சேதப்படுத்தியுடன் விவசாயிகளைக் கொன்ற ஒற்றை கருப்பன் யானையைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கிகள் தாளவாடி வரவழைக்கப்பட்டன. மேலும் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க 4 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனப்பணியாவார்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இரு தினங்களாகக் கருப்பன் யானை நடமாட்டத்தைக் கண்காணித்த வனத்துறையினர் நேற்றிரவு மரியாபுரம் கிராமத்துக்குள் நுழைந்த கருப்பன யானையைச் சுற்றி வளைத்தனர். அங்கிருந்து யானை வெளியேறாதபடி 3 ஜேசிபி இயந்திரங்கள், 150 பணியாளர்கள் வளையம் போன்று நிறுத்தப்பட்டு அதனை மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க வனக்கால்நடை மருத்துவமனை குழு தயாரானது. ஆனால் வனத்துறையினரிடமிருந்து தப்பித்த யானை கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதையும் படிங்க:Pathare Accident: பேருந்து - லாரி மோதி விபத்து: ஷீரடிக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் பலி!