தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Karthigai Deepam: ஈரோட்டில் அகல் விளக்கு விற்பனை அமோகம்! - karthigai deepam rituals

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் அகல் விளக்கு விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்திகை தீபத் திருவிழா
கார்த்திகை தீபத் திருவிழா

By

Published : Dec 6, 2022, 1:41 PM IST

ஈரோடு: தமிழகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சத்தியமங்கலம் பகுதியில் அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக மழை காரணமாக விற்பனை மந்தமாகக் காணப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழா

இன்று மழையின்றி வெயில் தாக்கம் இருப்பதால் அகல் விளக்கு விற்பனை அதிகரித்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சுடுமண்ணால் செய்யப்பட்ட 5 விளக்குகள் 10 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ஒன்று ரூ.30க்கும், லட்சுமி விளக்கு ஒன்று ரூ.25க்கும், பஞ்ச முக விளக்கு ஒன்று ரூ.10 என விற்கப்படுகிறது. தற்போது விளக்கு விற்பனை சூடு பிடித்துள்ளதால் மண்பாண்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய பைரவர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக விழா எப்போது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details