ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட அனைத்து வித நோய்த்தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, புதிய நபர்களுக்கு நோய் பரவுவது வெகுவாகக் குறைந்தது.
அதேபோல், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக பெருந்துறையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 நபர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 69 பேர் முற்றிலும் குணமடைந்து, வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு ஈரோடு மாற்றப்பட்டது.
அதுமட்டுமல்லாது, மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை பதியப்படாததால், ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம், சிவப்பு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறிய முதல் மாவட்டம். 32ஆவது நாளாக மாவட்டத்தில் எந்த ஒரு புதிய கேஸூம் பதியப்படவில்லை. இந்த மகத்தான சாதனையை நிகழ்த்திய மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பிக் சல்யூட்" என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது, பொள்ளாச்சி வழக்கில் எப்போது? - நடிகர் கார்த்தி