தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள தாளவாடியில் விளையும் முட்டைகோஸ், தக்காளி, வெங்காயம், பீன்ஸ், வாழைக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் வேன் மூலம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.
தினம்தோறும் நூற்றுக்கணக்கான காய்கறிவேன், டெம்போக்கள் கர்நாடகாவின் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக திருப்பூர், ஈரோடு, கோவை மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு செல்கின்றன. இரு மாநிலங்களிடையே காய்கறி வாகனங்கள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு பாஸ் வழங்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்கள் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழ்நாட்டிற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல மாநில எல்லையான கேர்மாளத்திலும் கர்நாடக சோதனைச்சாவடி வழியாக தமிழ்நாட்டிற்குச் செல்ல தடைவிதித்தனர்.