ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அரசு சார்பில் தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியை தேசிய பயிற்சியாளர் பரமேஸ்வரன் அளித்து வருகிறார். மேலும் உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார் தலைமையில் தேசிய பயிற்சியாளர் பரமேஸ்வரன், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தினமும் காலை மாலை பயிற்சி அளித்து வருகிறார்.