திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலருமான கனிமொழி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரைக்காக ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அவர் கேட்டு வருகிறார்.
பெரியார் நினைவகத்தில் கனிமொழி - kanimozhi
ஈரோடு : தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள கனிமொழி, தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டார்.
கனிமொழி
அதன்படி, இன்று (டிச.01) ஈரோடு தெற்கு மாவட்டத்தில் நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளைச் சந்தித்து பேசினார். பின்னர் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் நினைவகத்திற்குச் சென்று அவர் பார்வையிட்டார்.