ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் மநீம கட்சி வேட்பாளர் கார்த்திக் குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (மார்ச்.18) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், மக்களுக்கு சேவைசெய்ய உதவியாக இருக்கும். ஊழல் கட்சியை ஒழிப்பதற்கு மற்றொரு ஊழல் கட்சியை ஆதரிக்கக்கூடாது. ஒரு நோயை ஒழிப்புதற்கு இன்னொரு நோயைக் கொண்டு வரக்கூடாது" என்றார். அப்போது, அவரது மைக் திடீரென ரிப்பேர் ஆனது. தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கமல் பேசத் தொடங்கினார்.