ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள போயகவுண்டனூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக கிராம மக்கள், சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்குத் தேவையான நாற்காலிகள், விளையாட்டு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
குழந்தைகளை ஊக்குவிக்க கல்விச்சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள் - anganwadi
ஈரோடு: போயகவுண்டனூர் அங்கன்வாடி மையத்தில் எல்கேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்துக்கு கல்விச்சீர் வழங்கி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.
கல்விச்சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்
அதன்படி குழந்தைகளின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மங்கல வாத்தியம் முழங்க அங்கன்வாடி மையத்திற்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொண்டு சென்று ஒப்படைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை ஊக்குவிப்பதற்காகவே கல்விச்சீர்வரிசை வழங்கும் விழாவை நடத்தியதாகத் தெரிவித்தனர்.