தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் எஃகு கோட்டை - செங்கோட்டையன் பேச்சு - Erode Kongu Mandal is the steel fortress of AIADMK

வரும் பிப்.27ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் (Erode East ByPoll) மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அதிமுகவின் தேர்தல் பணிக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 30, 2023, 10:51 PM IST

கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் எஃகு கோட்டை - செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு: நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி(Erode East ByPoll), அதிமுக தேர்தல் பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் இன்று (ஜன.30) ஈரோட்டில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், 'எம்ஜிஆர்-ஜெயலலிதா தலைவர்களின் வழியில் நான்காண்டு காலம் தமிழ்நாடு வியக்கத்தக்க வகையில் அவர்கள் வழி நின்று இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் பல மாற்றங்களை துறைதோறும் உருவாக்கி சிறப்பான ஆட்சி நடத்திய பெருமைக்குரியவர், எடப்பாடி பழனிசாமி. மிக எளிமையாக, பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை பொதுமக்கள், கழகத்தினர் போற்றும் அயராத உழைப்பினால் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் அவர் பணியாற்றி வருகிறார்.

கொங்கு -அதிமுகவின் எஃகு கோட்டை!:அவரது தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் எஃகு கோட்டை. அதை யாராலும் தகர்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல தேர்தல் களம் கண்டவர்கள் இந்த இடைத்தேர்தலில் பணியாற்றுகின்றனர்.

தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறோம், இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஈரோடு இடைத்தேர்தல் என்பது திண்டுக்கல் இடைத்தேர்தலை போல் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்.

திருப்பு முனை: மேலும், இந்த இடைத்தேர்தல் திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். இதில் அதிமுகவுக்கே வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே இதற்காக, களத்தில் பணிகளை சிறப்போடு அமைதியோடு செய்து வருகிறோம், சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சரியான முறையில் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோம்’ எனக் கூறினார்.

அணிகள் எத்தனையானாலும் வாக்குகள் சிதறாது:மேலும் பேசிய அவர், நீதிமன்ற வழக்கை பொறுத்த வரை, நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதைப் பூர்த்தி செய்து செயல்படுவதோடு அச்சமின்றி தேர்தல் பணி செய்வதாக கூறினார். தெளிவாக 98.5% பேர் ஒரு மனதாக பொதுச் செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் செயல்படுவதாகவும், தங்களுக்கே முழு மனதோடு வெற்றி கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த தேர்தலில் 4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதாலும் வாக்குகள் சிதறாது என்றார்.

அதிமுக கைவசம் வியூகம்:நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே, அதிமுகவின் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என்றார். குருச்சேத்திர யுத்தத்தைப் போல், இந்த தேர்தலுக்கு வியூகம் வகுத்துள்ளதாக கூறினார். மேலும், பாஜக தனித்து போட்டியிடுகிறதா என்பது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

ABOUT THE AUTHOR

...view details