தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதிநிலை அறிக்கை சாமானியர்களுக்கா.? அம்பானி, அதானிக்கா.? - கி.வீரமணி ஆவேசம் - திராவிடக் கழகத் தலைவர் வீரமணி

நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களுக்கானது, அம்பானிக்கும், அதானிக்கும் உள்ள வறுமையை ஒழிப்பதுக்கு அல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி
கி.வீரமணி

By

Published : Feb 5, 2023, 4:07 PM IST

கி.வீரமணி பேச்சு

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மொடச்சூர் சாலையில் திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் நடைபெற்றுது. இந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு சமூக நீதிப் பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்கம் குறித்துப் பேசினார்.

அதில், 'தமிழ்நாட்டில் இன்றைய திமுக ஆட்சி சமூக நீதியையும், சுயமரியாதையையும், ஏழை எளிய மக்களுக்கு பயன்படக்கூடிய ஆட்சியாகவும் உள்ளது. நேரடியாக திமுக ஆட்சியை எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக ஆளுநர் மூலமாக போட்டி அரசை நடத்துகின்றனர்.

ஆதாரமற்ற செய்தியை எடுத்துக்கொண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், ஆன்லைன் சூதாட்டம் போன்ற மிக முக்கியமான மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல், நிறைவேற்றாமல் தாமதப்படுத்திக்கொண்டிருப்பது தவறு என்பதை மக்களுக்கு விளக்கி, மக்களை ஒரு பெருந்திரள் கிளர்ச்சிக்கு ஆயத்தப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்குவது தான் இந்தப் பயணத்தின் நோக்கம்.

ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தனி நபர் வருமானம் 7 லட்சம் ரூபாய் வருமானவரி என்பது ஒரு வித்தை. அது புண்ணுக்கு புணுகு பூசுவது போன்று. பல இடங்களில் பார்த்தால் பிராக்கெட்ஸ் நிறையாக உள்ளது. அதே நேரத்தில் வறுமை ஒழிப்பு திட்டமாக இருந்தால் கிராமங்களில் தான் வறுமையுள்ளது. அம்பானிக்கும், அதானிக்கும் உள்ள வறுமையை ஒழிப்பது அல்ல. நிதிநிலை அறிக்கை என்பது வாக்களித்த ஏழை எளிய மக்களுக்காகத் தான் இருக்க வேண்டும்.

இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டத்தை 33 சதவீதம் குறைத்துவிட்டார்கள்.ஒவ்வொரு ஆண்டும் குறைத்து வருகிறார்கள். இதற்கு காரணம் அரசியல். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதால் அந்தத் திட்டத்தை குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

சாமானிய மக்களுக்காக தான் நிதி நிலை அறிக்கை என்ற நிலையில் அந்த சாமானிய மக்களைப் பற்றி ஒன்றிய அரசு கண்டு கொள்வதில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி பல ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. அவர்கள் தமிழ்நாட்டையும் பெரிய அளவில் மதிக்கவில்லை. அதே நேரத்தில் ஏழை,எளிய மக்களையும் சிறப்பாக நடத்தவில்லை. அதேபோன்று சிறுபான்மை சமுதாயத்தை பற்றியும் கண்டு கொள்ளவில்லை. சிறுபான்மை பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணம் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கான கல்வி உதவித் தொகை கூட ரத்து செய்யப்பட கூடிய அளவிற்கு நிதியைக் குறைத்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: "பெண்ணாக மதுவிலக்கு குறித்து கனிமொழி இப்படி பேசலாமா" - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details