ஈரோடு:தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. குறிப்பாக சத்தியமங்கலம் பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டும் மல்லிகை, முல்லைப் பூக்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இரு தினங்களாக கோயிலில் கார்த்திகை உற்சவம் மற்றும் திருமண விஷேசம் காரணமாக பூக்களின் விலை கிலோ ரூ.2050-ல் இருந்து கிலோ ரூ.3050 வரை உயர்ந்தது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறது.
இங்கு கொள்முதல் செய்த பூக்கள் வேன் மூலம் மதுரை, மைசூர், கேளரா எனப் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. இன்று திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததால் இன்று மதியம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில் பூக்கள் விலை சரிந்தது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை ரூ.1550 ஆக சரிவு நேற்று கிலோ ரூ.3050க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.1550ஆக சரிந்தது. முல்லை ரூ.2180-இல் இருந்து ரூ.680-க்கும், சம்பங்கி ரூ.160-ல் இருந்து ரூ.40-க்கும் என விலை வெகுவாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க:49 வகையான சீர்வரிசையுடன் 23 ஜோடிக்கு இலவச திருமணம்!