தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதை பற்றி பொதுமேடையில் பேசுவது நாகரீகமல்ல: அமைச்சர் செங்கோட்டையன் - 15 லட்சத்து ஐம்பதாயிரம் மாணவர்கள் சேர்ப்பு

ஈரோடு: அதிமுக கட்சி நிலவரம் குறித்து பொதுமேடையில் பேசுவது நாகரீமல்ல என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

senkottaiyan
senkottaiyan

By

Published : Oct 1, 2020, 1:41 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம், பாரியூர் ஊராட்சிகளில் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கான்க்ரீட் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அப்போது, வெள்ளாங்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் 25 பயனாளிகளுக்கு கன்று வளர்ப்பு கடன்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "இதுவரை அரசு பள்ளிகளில் 15 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான தேதி இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுதான் கால நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். அதிமுக நிலவரம் குறித்து வெளியே கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது" என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் சேர கடும் போட்டி: குலுக்கல் முறையில் தேர்வு...!

ABOUT THE AUTHOR

...view details