தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது! - Tamil Nadu Thowheed Jamath

ஈரோடு: இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை எடுத்துரைக்கும் விதமாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு பரப்புரை நடைபெற்றது.

ஈரோடு

By

Published : Sep 30, 2019, 10:29 AM IST

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆண்டுதோறும் மூன்று மாத காலம் தீவிரவாத எதிர்ப்பு பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நடைபெற்றுவரும் பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் ரத்ததான முகாம்கள், பொதுஇடங்களை தூய்மைப்படுத்துதல், தூர்வாருதல் போன்ற சமூகப்பணிகள் நடைபெறுவதோடு பயங்கரவாதத்திற்கு எதிரான பேரணி, மனித சங்கிலி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று ஈரோடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு பரப்புரை தெருமுனை கூட்டமானது மாவட்ட செயலாளர் ஏ.ஜே.சாகுல் தலைமையில் கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தி நின்றனர்.

இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது

அப்போது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.ஜே.சாகுல் பேசுகையில், இஸ்லாமிய மார்க்கம் மனிதம் போற்றும் புனித மார்க்கம் என்றும் ஒருபோதும் ஆயுதம் ஏந்தும் கலாசாரத்தை அங்கீகரிக்காது எனவும் பேசினார்.

இதையும் படிக்கலாமே: 'எந்த விமர்சனத்திற்கும் பயப்பட மாட்டேன்..!' - நுஸ்ரத் ஜஹான் எம்பி பதிலடி

ABOUT THE AUTHOR

...view details