தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரோதம் காரணமாக இரும்புப் பட்டறை இடிப்பு: உறவினர்கள் போராட்டம் - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: விரோதம் காரணமாக இரும்புப் பட்டறை இடிக்கப்பட்டதால், அதன் உரிமையாளரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முன்விரோதம் காரணமாக இரும்பு பட்டறை இடிப்பு
முன்விரோதம் காரணமாக இரும்பு பட்டறை இடிப்பு

By

Published : Apr 28, 2021, 7:19 AM IST

ஈரோடு மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் இரும்புப் பட்டறை வைத்துள்ளார். இவரது தங்கை ரேவதியை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு பேர் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்செல்வன் தனது மனைவி, மகனை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்றார்.

தற்போது பிணையில் வெளியே வந்த தமிழ்ச்செல்வன் கருப்பசாமியிடம் சென்று தனது மகளைத் தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கருப்பசாமி மறுப்புத் தெரிவித்ததால், அவரது இரும்புப் பட்டறையை தமிழ்ச்செல்வன் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்துவிட்டார்.

இதனால் கருப்பசாமி உறவினர்கள் தமிழ்ச்செல்வனைக் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தி தமிழ்ச்செல்வனைக் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமாகும் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details