தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன விலங்குகளை விரட்ட புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு...! - பண்ணாரியம்மன் தொழில்நுட்க கல்லூரி

ஈரோடு: வனப் பகுதியில் விலங்குகள் நடந்து வரும் நில அதிர்வை துல்லியமாக கணித்து ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டும் புதிய தானியங்கி சென்சார் கருவியை பண்ணாரியம்மன் தொழில்நுட்க கல்லூரியின் பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய சென்சார் கருவி
புதிய சென்சார் கருவி

By

Published : Jan 1, 2021, 8:09 PM IST

ஈரோடு மாவட்டங்களில் யானைகள் தொந்தரவு அதிகளவு இருக்கும் நிலையில், சிறுமுகை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து விடுகின்றன. தாளவாடி, சத்தியமங்கலம், பண்ணாரி, கடம்பூரிலும் இதே நிலை இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். விளைநிலங்களில் உள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதை தடுக்க பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசியர்கள் சஞ்சய்தேப், ராம்குமார் ஆகியோர் யானை உள்ளிட்ட விலங்குகளை விரட்டும் புதிய தானியங்கி சென்சார் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

புதிய சென்சார் கருவி

இந்த கருவிக்கான நிதியுதவியை மத்திய அரசின் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சர்வசேத வனவிலங்கு நிதியம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. நில அதிர்வை கணிக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சென்சார் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. யானைகள் கிராமத்துக்குள் நுழையும்போது, தோட்டத்தில் ஏற்படும் அதிர்வலைகளை அங்கு பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிக்கு அனுப்பி சப்தம் எழுப்பும்.

புதிய சென்சார் கருவி

இந்த சப்தத்தை கேட்டு யானைகள் ஓடிவிடும். தானியங்கி கருவியில் உள்ள சென்சார் பூனை முதல் யானை வரையிலான அதிர்வை மிக துல்லியமாக கணிக்கும் திறன் கொண்டது. இந்த கருவியை பண்ணாரியம்மன் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details