ஈரோடு: தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் கடம்பூர் மலைப்பாதை கேஎன் பாளையம் சோதனைச்சாவடி வழியாக நாட்டு வெடி குண்டு செய்ய தேவையான பொருள்கள், கஞ்சா, போதைப்பாக்குகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடம்பூரில் இருந்து வந்த வாகனங்களை காவல்துறையினர் டைகர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர். பேருந்தில் வந்த பயணிகளிடமும் சோதனை நடைபெற்றது. பயணிகளின் காய்கறி மூட்டைகள், பைகள் சோதனையிடப்பட்டன. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் டெம்போ வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.