பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஆறு கட்சிகள் போட்டியிடுகின்றன.
நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் அனுப்பும் பணி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படுகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்குத் தேவையான கன்ட்ரோல் யூனிட், விவிபேட், மாற்று இயந்திரங்கள், வாக்காளர் பதிவுப் படிவம், தாள், ரப்பர் ஸ்டாம்பு, எழுதுபொருள்கள் உள்ளிட்ட 36 பொருள்கள், நோய்த்தடுப்புப் பாதுகாப்புப் பொருள்கள் அனுப்பப்பட்டன.