ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 374 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சரக்கு வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் எங்கு செல்கிறது என்பதை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும்.