ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய்புளியம்பட்டியில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
பல்வேறு ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள், கேரள வியாபாரிகள் மாடுகளை விலைபேசி வாங்கிச் செல்வது வழக்கம். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் இந்த கால்நடை சந்தையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மாடுகளின் கொம்புகளை சீவி அழகாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கால்நடை சந்தையில் மாடுகளுக்கு கொம்பு சீவும் பணி தீவிரம் மாட்டுப் பொங்கல் பண்டிகையின்போது மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்துவது வழக்கம். மாடுகளின் கொம்புகள் வர்ணம் பூசுவதற்கு ஏதுவாக கொம்பு சீவும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாட்டிற்கு கொம்பு சீவ 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விவசாயிகளும் தங்களது மாடுகளை புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு கொண்டுசென்று கொம்புகளை சீவிவிட்டு மீண்டும் கொண்டு செல்கின்றனர்.
இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல்: உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 2 கோடி மதிப்பில் ஆடு விற்பனை