தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனச்சாலையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்! - சத்தியமங்கலம் வனப்பகுதி

ஈரோடு: புலி, சிறுத்தை நடமாடும் வனச்சாலையை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருமிநாசினி
கிருமிநாசினி

By

Published : Jun 4, 2020, 7:21 PM IST

கரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகமாகி வரும் நிலையில், ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் பச்சை மண்டமலாக உள்ளது.

மேலும் இரு மாநில எல்லையில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள், யானைகள் அதிகளவில் உள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை, தமிழ்நாடு எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி, தெர்மல் காய்ச்சல் அறிகுறி பரிசோதிக்கப்படுகிறது.

மேலும் சோதனைச்சாவடியில் நோய்த் தடுப்புக்கிருமி நாசினி, தீயணைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கரோனா நோய்த்தொற்று வனவிலங்குகளுக்கு பரவலைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானைகள், சிறுத்தைகள், புலிகள் நடமாடும் சாலையில் ஆங்காங்கே கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஆசனூர் முதல் காரப்பள்ளம் வரையிலான சாலையின் குறுக்கே, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய்த்தொற்றல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details