ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதி நகலூரில் பொதுமக்கள், காவல் துறையினருக்கிடையேயான நல்லுறவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நகலூர் பழங்குடியினர் கலந்துகொண்டனர்.
அப்போது கரோனாவால் வாழ்வாதாரம் இழந்துதவிக்கும் 126 பழங்குடியினருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட 14 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் வழங்கி, பழங்குடியின மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, “விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன், அறிவியலையும் கலந்து தொற்றைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவது அவசியம்.
குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கக் கூடாது. பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி நம் நாட்டை நோயில்லாத நாடாக மாற்ற வேண்டும். கிராமத்துக்கு புதிய நபர்கள் வந்தால் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார்.