தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசின் திட்டங்களை சிறுபான்மை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' - ஈரோடு மாவட்ட ஆட்சியர் - Indian Minority Day

ஈரோடு: தமிழ்நாடு அரசு சிறுபான்மையின மக்களுக்கு வழங்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சிறுபான்மை இனமக்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Indian Minority Day
Indian Minority Day

By

Published : Feb 28, 2020, 9:51 AM IST

இந்திய சிறுபான்மையினர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், அரசு துறை அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதில் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் வழங்கினார். மேலும், முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ முகாம், அவர்களுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கினார்.

இந்திய சிறுபான்மையினர் தினம்

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், ' தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்கு எனப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக சிறுபான்மை மக்கள் தொழில் தொடங்கவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை சிறுபான்மையின மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அசைவம் உண்போம்! குணத்தால் ஒருவர் என்போம்!' - ஸ்டாலின் பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details