தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைனில் மருந்து வாங்கினால் உத்திரவாதம் கிடையாது: இந்திய மருந்து வணிகர் சங்கம்

ஈரோடு: அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வத்திற்கு, கோபி தாலூக்கா மருந்து வணிகர் சங்கம் சார்பில் கோபிசெட்டிபாளையம் தனியார் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

Online
Medical shop

By

Published : Dec 15, 2020, 7:29 PM IST

அகில இந்திய அளவில் மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்நாடு வணிகர் சங்க செயலாளரும் அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளருமாகிய செல்வத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் யாரும் போட்டியிடாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு வருகை புரிந்த செல்வத்தை கோபி தாலூக்கா மருந்து வணிகர் சங்கம் சார்பில் வரவேற்று பொன்னாடை அறிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் பொருளாளர் செல்வம் பேசியபோது, குறைந்த விலையில் ஆன்லைன் மூலமாக வாங்கும் மருந்துகளில் தரத்திற்கான உத்திரவாதம் இருக்காது. மக்கள் மீண்டும் நேரடி மருந்து கடைகளை தேடி வரும் நிலையே ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அவரை பாராட்டி பேசிய நிர்வாகிகள், இந்தியாவில் கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட போது, மருந்து பொருள்களை நாடு முழுவதும் தடையின்றி கிடைக்க பொருளாளர் செல்வம் சிறப்பான ஏற்பாடுகளை செய்தார். அதன் காரணமாகவே, அகில இந்திய அளவில் மீண்டும் அவரை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details