தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் குடத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்! - ஈரோடில் தண்ணீர் குடத்துடன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு: பாண்டியாறு-புன்னம்புழா நீர் மின் திட்டத்தை நிறைவேற்றக்கோரி சுயேட்சை வேட்பாளர் தண்ணீர் குடத்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் செய்திகள்
தண்ணீர் குடத்துடன் வேட்புமனு தாக்கல்

By

Published : Mar 17, 2021, 10:18 AM IST

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள சிறுவலூரைச் சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள இரும்பு பட்டறை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற கோரி, திருப்பூர் தொகுதியில் போட்டிட்டு 1,400 வாக்குகளைப் பெற்றார். எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில்,நேற்று (மார்ச்.16) கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இரு சிறுவர்களுடன் தலையில் தண்ணீர் குடத்துடன், நடைப்பயணமாக கோபிச்செட்டிப்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிதேவியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தண்ணீர் குடத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தலையில் தண்ணீர் குடத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நடைபயனமாக சென்றதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் தண்ணீர் குடத்துடன் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தலையில் தான் சுமந்து வந்த தண்ணீர் குடத்தை 200 மீட்டருக்கு முன்பு இறக்கிவைத்து விட்டு, பின் வேட்பு மனு தாக்கல் செய்ய கோட்டாட்சியர் அலுவலகம் சென்றார்.

பண்டியாறு-பொன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றக்கோரி பல தேர்தல்களில் சுயேட்சையாக குமார் போட்டியிட்டுள்ளார் என்பதும் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேட்பாளரை மாற்றக்கோரி முதலமைச்சர் வாகனம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details