தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறப்பு! - ஈரோடு மாவட்ட செய்தி

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1500 கன அடியில் இருந்து 2000 கனஅடி ஆக நீர்த்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்த்திறப்பு 2000 கனஅடி ஆக அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்த்திறப்பு 2000 கனஅடி ஆக அதிகரிப்பு

By

Published : Dec 26, 2022, 2:27 PM IST

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்த்திறப்பு 2000 கனஅடி ஆக அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி பெருந்துறை வாய்க்கால் மேடு கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இரு வாரங்களாக நடைபெற்ற கால்வாய் புனரமைப்பு பணி நிறைவடைந்ததால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நீர்த்திறப்பு 1500 கனஅடியில் இருந்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கடைமடை வரை நீர் சென்றடையும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

அணைக்கு நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.58 அடியாகவும் நீர்வரத்து 756 கன அடியாகவும் கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2000 கனஅடிநீரும் பவானி ஆற்றில் 600 கனஅடி நீரும் என 2600 கனஅடி நீர் திறந்துவிடப்டுகிறது.

அணையின் நீர் இருப்பு 32.44 டிஎம்சி ஆக உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மூலம் திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3500 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details