கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டின் ஜவுளி நகரம் என்றழைக்கப்படும் ஈரோடு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கடை வீதிப் பகுதி, கனி மார்க்கெட் ஜவுளிச் சந்தை அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விற்பனை நிலையம் முதல் மொத்த ஜவுளி விற்பனை நிலையங்களும் உள்ளன.
கடந்த ஆறு மாத காலத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கனி மார்க்கெட் வாரச் ஜவுளிச்சந்தை தலைவர் செல்வராஜ் கூறுகையில், "கனி மார்க்கெட் ஜவுளிச் சந்தையில் மட்டும் வெளிமாநில வியாபாரிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகையால் மாதம் தோறும் சுமார் 30 கோடி ரூபாய் வரை ஜவுளி வர்த்தகம் நடைபெறும். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக உள்ளூர் மக்கள் மட்டுமே தங்களது தேவைக்கு ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இ-பாஸ் தளர்வு காரணமாக கடந்த சில நாள்களாக வெளிமாவட்ட வியாபாரிகள், வெளிமாவட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், 25 விழுக்காடு வியாபாரம் உயர்ந்து, வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதபோன்று இ-பாஸ்க்கு தளர்வு அறிவித்தால் மட்டுமே தீபாவளி விற்பனையை தற்காத்துக் கொள்ள முடியும். புதுச்சேரியைப் போல் தமிழ்நாட்டிலும் இ-பாஸ் முறையை ரத்து செய்திட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க:'ஓபிசி இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக' - ராமதாஸ்