தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.ஆர்.எஸ். லுங்கி நிறுவனத்தில் வருமான வரி சோதனை! - Erode district news

ஈரோடு: லுங்கிகள் தயாரிக்கும் எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.ஆர்.எஸ். லுங்கி நிறுவனம்
எஸ்.ஆர்.எஸ். லுங்கி நிறுவனம்

By

Published : Feb 6, 2020, 9:38 PM IST

ஈரோடு வெங்கடாஜலபதி வீதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எஸ்.ஆர்.எஸ். லுங்கிகள் தயாரிக்கும் நிறுவனம். இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் லுங்கிகள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மற்ற நிறுவனங்களுக்கு ஜாப் ஒர்க் செய்து தருகின்றனர்.

இந்த நிறுவனமானது, தான் தயாரிக்கும் லுங்கிகள், இதர துணி வகைகளைத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா கடைவீதி பகுதியான வெங்கடாஜல வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, சொக்கநாத வீதி உள்ளிட்ட இடங்களில் எஸ்.ஆர்.எஸ். நிறுவனம் இயங்கிவருகிறது.

அனைத்து நிறுவனங்களிலிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் எஸ்.ஆர்.எஸ். லுங்கிகள் நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் 35க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.ஆர்.எஸ். லுங்கி நிறுவனம்

இதையும் படிங்க: விஜய் செல்போன் பயன்படுத்த தடை - வருமான வரித்துறை

ABOUT THE AUTHOR

...view details