ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் மயிலானந்தம், இவருக்கு சந்திரசேகர், சிவக்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் எஸ்கேஎம் நிறுவனம் எனும் பெயரில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
நஞ்சை ஊத்துக்குளியில் மாட்டு தீவனம், சமையல் எண்ணெய் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் சோளங்காபாளையத்தில் முட்டை பவுடர் தயாரிக்கும் நிறுவனம், சாமிநாதபுரத்தில் சித்தா ஆயுர்வேதம் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவை சோலாரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன.