தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரி ஏய்ப்பு புகார் - நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை - raid at nandha educational institiute in erode

ஈரோடு: வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, நந்தா கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

nandha educational institiute
nandha educational institiute

By

Published : Oct 29, 2020, 7:25 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் நந்தா பொறியியல் கல்லூரி, கலை அறிவியல், நர்சிங், பார்மசி, பாலிடெக்னிக் கல்லூரி, சிபிஎஸ்சி பள்ளி, மெட்ரிக் பள்ளி மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகம் என்பவரின் பண்ணை வீடு ஆகியவற்றில் கோயம்புத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெளியே விடாமல் அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து கல்லூரி வளாகத்தில் தங்கவைத்துள்ளனர். வருமான வரித்துறையினர் வந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளையும் வெள்ளி நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாற்றி அமைத்தனர். நேற்று (அக்டோபர் 28) பிற்பகல் தொடங்கிய இந்த சோதனை தற்போது வரை நடைபெற்று வருகிறது.

மேலும், வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை முடிந்த பிறகு தான் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தெரியவரும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். முன்னதாக, நந்தா கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details