தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைத் தேனீக்கள் கொட்டியதில் சிறுவர்கள் மயக்கம் - மலைத் தேனீக்கள் கொட்டியதில், சிறுவர்கள் மயக்கம்

ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை மலைத் தேனீக்கள் கொட்டியதால் சம்பவ இடத்திலேயே சிறுவர்கள் மயக்கமடைந்தனர்.

மலைத் தேனீக்கள் கொட்டியதில், சிறுவர்கள் மயக்கம்
மலைத் தேனீக்கள் கொட்டியதில், சிறுவர்கள் மயக்கம்

By

Published : Apr 2, 2021, 8:41 AM IST

பர்கூர் வனச்சரகத்திற்குள்பட்ட ஊசிமலை கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை மலைத் தேனீக்கள் கொட்டியது.

சிறுவர்கள் மயக்கமடைந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவர்களை உடனடியாக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

அங்கு போதிய வசதிகள் இல்லாததால் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.

சிறுவர்களுக்கு உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் சிறுவர்கள் நலமாக உள்ளதாக அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவிட்-19: சமாளித்து உயர்வு கண்ட ரயில்வே துறை

ABOUT THE AUTHOR

...view details