ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகத்தில் அருள்வாடி வனக்கிராமம் உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள இக்கிராமத்தில் யானைகள் அடிக்கடி புகுந்து வாழை, சோளப்பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இங்குள்ள, பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளையா என்பவர் தோட்டத்தில் ராகி, சோளம் பயிரிட்டிருந்தார். யானை தினந்தோறும் தோட்டதில் புகுந்து பயிரைச் சேதப்படுத்தியதால், கவலை அடைந்த விவசாயி காளையா யானை வருவதை தடுக்க மின்வேலி அமைத்துள்ளார். இந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி இரவு நேரத்தில் வேலியில் பாய்ச்சியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி வழக்கம்போல் மக்காச்சோளப்பயிரை சேதப்படுத்த வந்த யானை மின்வேலியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதைப்பார்த்த விவசாயி காளையா, பாதுகாப்புக்காக பிணை பெறுநோக்கில் வழக்குரைஞர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.