வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான (By-election for Erode East Constituency) இடைத் தேர்தலில், காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்குத் தொகுதியை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக இன்று (ஜன.19) அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து அந்த தொகுதியின் பக்கம் அதிமுக தலைமையிலான பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கட்சிகளின் வேட்பாளரை இந்த இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது முனைப்பு காட்டி வந்தன. அந்த வகையில், அதிமுகவின் கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸிற்கே இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டணியிலுள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் இன்று மும்முரமாக ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து மதச்சார்பற்றக் கூட்டணியினர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், '2023ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கனவே 2021-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற கூட்டணி அறிவிப்பு இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான பிற அறிவிக்கைகள் வரும் ஜனவரி 31ஆம் தேதி என்றும், அதற்கான மனுதாக்கல் செய்ய கடைசி நாள் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி என்றும், அதனை மறுபரீசிலனை செய்ய 8ஆம் தேதி என்றும்; மேலும், மனுவை வாபஸ் பெற வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வரும் பிப்.27ஆம் தேதி என அறிவிப்பு