தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 சவரன் செயின் பறிப்பு! - ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் திருட்டு

ஈரோடு: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 சவரன் தாலிச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chain theft

By

Published : Oct 12, 2019, 11:30 PM IST

ஈரோடு கருங்கல்பாளையம் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கழுத்தில் இருந்த 9 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றனர்.

இதில் அப்பெண்ணின் கழுத்தில் சிறிது காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: '121 சவரன் தங்க நகைகள், 2 செல்ஃபோன்கள், 2 இருசக்கரவாகனங்கள் பறிமுதல்' - பிடிபட்ட பலநாள் வழிப்பறி திருடர்கள்!

ABOUT THE AUTHOR

...view details