ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் குடியிருப்பில் அருகே மதுரை வீரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் வாசலில் இரண்டு கோயில் கோபுர கலசங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர். அதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஈரோட்டில் கோயில் கலசங்கள் திருட முயற்சி - temple colossal theft
ஈரோடு: மல்லிகை நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் சமய மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களை திருட முயற்சித்த சம்பவம், பக்தர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் கோயில் கலசங்கள் திருட முயற்சி
இதனால் சம்பவம் இடத்திற்கு விரைந்த கருங்கல்பாளையம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில், மல்லிகை நகர் சமய மாரியம்மன் கோயில் கோபுரத்தின் மூன்று கலசங்களை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டு, அதில் ஒரு கலசம் அதே கோயிலில் கிடைத்துள்ளது. மற்ற இரண்டு கலசங்கள் மதுரை வீரன் கோயில் முன்பு கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கலசங்களை திருட முயன்றவர்களை தேடி வருகின்றனர்.