தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு: வரிசை கட்டி நிற்கும் மன்னர் கால குதிரைகள்.. அந்தியூர் குருநாதசாமி கோயில் சந்தையின் சிறப்பம்சங்கள் - கத்தியவார்

தென் இந்தியாவில் புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோயில் கால்நடைச் சந்தை இன்று துவங்கியதையடுத்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்துள்ளனர்.

ஈரோடு கால்நடை சந்தை
ஈரோடு கால்நடை சந்தை

By

Published : Aug 10, 2023, 1:28 PM IST

Updated : Aug 10, 2023, 7:56 PM IST

ஈரோடு: வரிசை கட்டி நிற்கும் மன்னர் கால குதிரைகள்.. அந்தியூர் குருநாதசாமி கோயில் சந்தையின் சிறப்பம்சங்கள்

ஈரோடு:அந்தியூர் அடுத்துள்ள புதுப்பாளையத்தில் அமைந்து உள்ளது குருநாத சுவாமி கோயில். இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் மிகவும் விமரிசையாக நடைபெறும். இந்த கோயில் திருவிழாவில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? தென்னிந்தியாவில் புகழ்பெற்ற குதிரை மற்றும் கால்நடைச் சந்தைகள் நடைபெறுவது தான்.

இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் குதிரைகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வருவர். அது மட்டுமில்லாமல் இந்த சந்தையில் மன்னர் காலங்களில் போருக்கு பயன்படுத்திய மார்வார், கத்தியவார் போன்ற உயர் ரக குதிரைகளையும் பார்க்கலாம்.

1 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த குதிரைகள் பார்ப்பதற்காக மட்டுமில்லை, விற்பனைக்காகவும் தான். இந்த கால்நடைச் சந்தையில் கலப்பின மாடுகளான சிந்து, ஜெர்சி, தமிழகத்தில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள், நாட்டு மாடுகள், பர்கூர் இன மாடுகள் இது மட்டுமில்லாமல் அதிக பால் கொடுக்கும் உயர் ரக கலப்பின மாடுகளும் விற்பனைக்காக உள்ளன. இந்த வருடம் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஓங்கோல் இன மாடுகளும் கால்நடை சந்தையை அலங்கரித்து உள்ளது.

இதையும் படிங்க:வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயிகளிடம் இருந்து ரூ.100க்கு தக்காளி கொள்முதல்! தாளவாடி விவசாயிகள் மகிழ்ச்சி..

கால்நடைகளுக்கென பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களுக்கான ஸ்டால்கள் கால்நடைச் சந்தையில் கண் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. குதிரைகளையும், மாடுகளையும் வாங்கிச் செல்வதற்கும் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து உள்ளனர்.

கரோனா பெரும் தொற்றால் கடந்த மூன்று ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த கோயில் திருவிழாவானது கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி அன்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதன் பின் முக்கிய நிகழ்வான ஆடிப்பெரும் தேர் திருவிழாவுடன் குதிரை மற்றும் மாட்டுச் சந்தையுடன் விழா இன்று (ஆகஸ்ட் 10ஆம் தேதி) துவங்கி உள்ளது. இந்த கால்நடைச் சந்தையானது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பவானி துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி மற்றும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பேரூராட்சி கூட்டத்தில் தீர்மான புத்தகத்தை தூக்கிச்சென்ற காங்கிரஸ் கவுன்சிலர் - வீடியோ வெளியீடு!

Last Updated : Aug 10, 2023, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details