ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கே.வி.கே.சாமி வீதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், கணவனை இழந்த மூதாட்டி அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவை மாவட்டம், அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, வீட்டிற்கு வந்த மூதாட்டியை, கரோனா தொற்று இருப்பதால் அவரது மகளும் மருமகனும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து வீட்டின் வாசல் முன்பு அமர்ந்து அவர் காத்திருக்கத் தொடங்கினார். அக்கம்பக்கத்தினரும் அவர் அருகில் செல்ல அச்சப்பட்ட நிலையில், இதுகுறித்து தகவலறிந்து வந்த புளியம்பட்டி நகராட்சி அலுவலர்கள், மூதாட்டிக்கு உணவு வழங்கி, அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.