ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோயில் அருகே வருவாய்த்துறைக்குச் சொந்தமான குட்டை உள்ளது. இந்தக் குட்டையிலிருந்து மண் எடுப்பதற்காக வருவாய்த்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் மண் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் நேற்று குட்டையிலிருந்து மண் அள்ளிவந்த டிராக்டர்களை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கிராம மக்கள் ”குட்டையில், அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதால் குட்டையில் உள்ள பாதை குண்டும் குழியுமாக மாறிவிடும் இனி மண் எடுக்கக்கூடாது” என வாதிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிராக்டரை சிறைபிடித்த கிராம மக்கள் அப்போது பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சோதனைச்சாவடியில் யானை அட்டகாசம்: வாகன ஓட்டிகள் அச்சம்