ஈரோடு நகர காவல் நிலையத்திற்குட்பட்ட மொய்தீன் வீதியில், முருகேசன் என்ற புத்தக கடை உரிமையாளரின் வீட்டில் கடந்த 6ஆம் தேதி 22 சவரன் நகை திருடு போனது. உடனடியாக, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ஈரோடு நகர காவல் துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையம் அருகே முத்து என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோட்டில் நகை திருடிய ஆசாமி கைது - 22 சவரன் பறிமுதல் - வழக்குபதிவு செய்து
ஈரோடு: புத்தக கடை உரிமையாளர் வீட்டில் 22 சவரன் நகை திருடியது தொடர்பான வழக்கில் முத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
crime acutest arrest
அப்போது, முருகேசன் வீட்டில் நகையை திருடியது உறுதியானது. இதனையடுத்து முத்துவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 22 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.