தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்தால் 4 மணி நேரத்தில் ஆலை மூடப்படும்'

ஈரோடு: பவானிசாகர் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்தால் நான்கு மணி நேரத்தில் ஆலை மூடப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் எச்சரித்துள்ளார்.

if dirt is mixed in the river The plant will be shut down at 4 hours said minister karupannan
if dirt is mixed in the river The plant will be shut down at 4 hours said minister karupannan

By

Published : Jul 4, 2020, 10:45 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தபாடியில் 42 வணிகர்களுக்கு சிறு வணிகக் கடனுதவிகளை அமைச்சர் கே.சி. கருப்பணன் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பவானி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக, பவானிசாகர் ஆற்றில் 99 விழுக்காடு சாயக் கழிவு கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்தால் நான்கு மணி நேரத்தில் ஆலை மூடப்படும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஆற்றில் சாயக்கழிவு கலப்பதில்லை. இதுகுறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர்கள் பசுமை தீர்ப்பாயத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

ஆற்றில் சாயக்கழிவுகள் கலந்தால் 4 மணி நேரத்தில் ஆலை மூடப்படும்

மாவட்டத்தில் பயன்படுத்திவிட்டு சாலைகளில் தூக்கி வீசப்படும் முகக் கசவங்களை சேகரித்து அதனை இரண்டு மணி நேரத்திற்குள்ளாக தூய்மைப் பணியாளர்கள் எரித்துவிடுகின்றனர். மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருவதாகக்" கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details