தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2020, 10:30 AM IST

ETV Bharat / state

ஐடிபிஎல் பேச்சுவார்த்தை தோல்வி - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

ஈரோடு: விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதிக்கும் ஐடிபிஎல் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் இன்று (செப். 15) முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

IDPL negotiation talks
ஐடிபிஎல் திட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை

விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதிக்கும் ஐடிபிஎல் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்நது முத்தரப்பு பேச்சுவார்த்தை ஈரோட்டிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று (செப். 15) முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவிருப்பதாக விவசாயிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடகா மாநிலம் தேவனஹள்ளி வரை, ஈரோடு, திருப்பூர் உள்பட ஆறு மாவட்டங்களை கடந்து விவசாய நிலங்கள் வழியாக ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி: நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த வாகன ஓட்டி..!

ABOUT THE AUTHOR

...view details