தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியது தவறாக பரப்பப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர்: இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியது தவறாக பரப்பப்பட்டு வருகின்றது என்று, அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்

By

Published : Mar 27, 2019, 8:02 PM IST


ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றுள்ள தாராபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனுக்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார். இதையடுத்து பரப்புரையை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது;

இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியதாக தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவை முற்றிலும் வதந்தியே, நான் இஸ்லாமிய மக்களை நேசிக்க கூடியவன். ஒருபோதும் அவர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கமாட்டேன்.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

மேலும் அதிமுக அரசு சிறுபான்மை மக்களுக்காகவே செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details