ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்ற ஒரு பெண்ணின் புகைப்படத்தை மோசடி கும்பல் ஒன்று, மார்பிங் செய்து அதை அவரது உறவினர்களுக்கு அனுப்பிய நிலையில் மனமுடைந்த அப்பெண் மாயமாகினார். இந்நிலையில், மாயமான தன் மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது கணவன் நம்பியூர் காவல்நிலையத்தில் இன்று (டிச.21) புகார் அளித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் இருகாலூர் பகுதியைச் சேர்ந்தவர் டிரைவர் வெங்கடாச்சலம் என்பவரது மனைவி மோகனசுந்தரி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வெங்கடாசலம் காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடிக்க கோரி நம்பியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளளர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரில், 'தன் மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்ததாகவும், ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பியுள்ளதாவும், இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்தார்.